விழுப்புரம், நவ. 26: விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில் நகர காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். தொடர்ந்து அவரை சோதனையிட்ட போலீசார் 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த காதர் உசேன்(24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
+
Advertisement


