திண்டிவனம், செப். 25: திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் ராஜ்குமார்(28). இருளர் வகுப்பைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டில் குழி தோண்டினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி அம்சவேணி (48) என்பவர் எனது நிலத்தில் பள்ளம் தோன்றியதாக கூறி பள்ளத்தை மூடுமாறு கூறிவாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். தகவல் அறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் சமாதானம் செய்தனர். தொடர்ந்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் யுவராஜ் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் இடத்தை அளக்க அறிவுறுத்தினர். அதன்படி இடத்தை அளந்தபோது சம்பந்தப்பட்ட இடம் சுடுகாடு என்றும், அதை அம்சவேணி ஆக்கிரமித்து விவசாயம் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதே இடத்தில் குழி தோண்டி ராஜ்குமாரின் உடலை அடக்கம் செய்ய வட்டாட்சியர் அறிவுறுத்தியதன்பேரில் இறுதி சடங்கை முடித்தனர்.
+
Advertisement