சின்னசேலம், செப். 24: கச்சிராயபாளையம் அருகே சடையம்பட்டு கிராமத்தில் சிவசுப்பிரமணியன் கோயில் உள்ளது. இந்த கோயில் தர்மகர்த்தாவாக அண்ணாதுரை(60) என்பவர் இருந்து கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்த கோயிலில் கடந்த 21ந்தேதி மாலை வழிபாடு நடந்தது. பின்னர் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை கலியபெருமாள் என்பவர் கோயில் வழிபாட்டிற்கு வந்தார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாதுரை வந்து பார்த்தபோது உண்டியலில் இருந்த பணம் மற்றும் 2 பித்தளை குடம், மணி உள்ளிட்ட ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணாதுரை கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
+
Advertisement