தியாகதுருகம், அக். 23: தியாகதுருகம் அடுத்த விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கன்(52). இவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மகள் தனியார் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து ராக்கன் அருகில் உள்ள உறவினர் மற்றும் சக தோழிகளின் வீட்டிற்கு சென்று தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செவிலியர் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
+
Advertisement


