புவனகிரி, ஆக. 22: புவனகிரி அருகே உள்ள சொக்கங்கொல்லை கிராமத்தில் வள்ளலார் கோயில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்கோயிலில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் கோயிலின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றையும் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் அங்கு சென்று கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். போலீசார் கைப்பற்றிய சிசிடிவி கேமரா காட்சியில், ஹெல்மெட் அணிந்தபடி வரும் மர்ம நபர் ஒருவர் கோயிலின் சுவறில் ஏறி குதித்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து திருடுவது பதிவாகி இருக்கிறது. அதே நேரத்தில் வெளியில் ஒருவர் நடமாடியதும் சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. எனவே இருவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து புவனகிரி போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே கோயிலில் ஏற்கனவே ஒரு முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement