நெல்லிக்குப்பம், செப். 19: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி. என். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(40). இவருக்கு சொந்தமான நிலத்தில் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலி அமைத்திருந்தார். கடந்த 5ம் தேதி செல்வகுமார் நிலத்திலிருந்த கம்பி வேலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து நடுவரப்பட்டு காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார் அளித்தார். இந்நிலையில் கொடுக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். அதில், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் தீவிர விசாரணையில், கொடுக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (30), ருசி குமார் (32) எனவும் இவர்கள் 2 பேரும் சேர்ந்து செல்வகுமாரின் விவசாய நிலத்தில் இருந்த கம்பி வேலியை திருடிச் சென்று விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து 2 பேரையும் நடுவீரப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement