சேத்தியாத்தோப்பு, செப். 19: சேத்தியாத்தோப்பு அருகே அம்மன்குப்பம் பகுதியில் தொப்பாச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்து கோயில் பூட்டப்பட்டது. இதையடுத்து நேற்று காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, கோயிலில் 2 அம்மன் கழுத்தில் இருந்து 2 பவுன் செயின் மற்றும் கோயில் பீரோவில் இருந்த ரூ.4000 போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய கடப்பாரை மற்றும் இரும்புக்கம்பி கோயிலில் கிடந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோயிலில் அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இக்கோயிலில் 3வது முறையாக திருட்டு நடந்துள்ளதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.
+
Advertisement