புவனகிரி, ஆக. 19: புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாதுரை. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர்களிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பாதுரை மற்றும் வீரன் ஆகிய இருவரும் தனித்தனியே புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement