உளுந்தூர்பேட்டை, நவ. 18: விழுப்புரம் மாவட்டம் அரியூர் கண்டமானாடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (33). சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர். இந்நிலையில் ஒரு காரில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றார். உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் தாறுமாறாக காரை ஓட்டிச் சென்ற டிரைவரிடம் இதுகுறித்து ஏன் இப்படி செல்கிறீர்கள் என கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த காரில் சென்ற புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன் (45), முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (39), திருக்கோவிலூர் அருகே டி.குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் வினோத்குமார் (29) ஆகிய 3 பேரும் காவல் உதவி ஆய்வாளரை அசிங்கமாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement


