Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

போதையில் ரகளை: 8 பேர் கைது

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் வீதி சுடுகாடு அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 2 பேர் குடிபோதையில் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்தியால்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, 2 பேரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (28), கோகுல் (24) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அதேபோன்று, முத்தியால்பேட்டை குருசுகுப்பம் மெயின் ரோடு கடற்கரையில் நள்ளிரவு போதையில் ரகளை செய்த குருசுகுப்பம் பால்ராஜ் (28), வாழைகுளம் சதீஷ் (28), பாலச்சந்தர் (28), முத்தியால்பேட்டை கார்த்திக்ராஜா (28), வைத்திக்குப்பம் ராஜ்கமல் (27), கோகுல் (24) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.