விழுப்புரம், அக். 17: புதுச்சேரி நிர்ணயப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கதிரவன்((38). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை காரில் கடத்திவந்து விற்பனை செய்துள்ளார். அவரை திருவெண்ெணய்நல்லூர் போலீசார் கைது செய்தனர். இதனிடையே கதிரவனின் இந்த குற்றச்செயலை தடுக்கும் வகையில் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க எஸ்பி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான் நேற்று அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனைதொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கதிரவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement