புதுச்சேரி, செப். 17: ஆன்லைனில் பகுதிநேர வேலை, ஆன்லைன் டிரேடிங் எனக்கூறி 3 பெண்கள் உள்பட 6 பேரிடம் ரூ.19.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என அவர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஆண் நபர், மர்ம நபர் கூறியபடி ரூ.16.33 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதற்கான வருமானம் கிடைக்கவில்லை. செலுத்திய தொகையையும் அவரால் திரும்பப்பெற முடியவில்ைல. அதன்பிறகே அவருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.இதேபோல், ஆன்லைனில் வீட்டில் இருந்தவாறே பகுதிநேர வேலை மூலமாக அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.17,500ம், எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.2.46 லட்சமும், வாணரப்பேட்டையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.5,900ம் மோசடி செய்துள்ளனர். அதேபோன்று, கேரளா லாட்டரி ஏஜெண்ட் எனக்கூறி எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.29,850ஐ மோசடி செய்துள்ளனர். லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த இளம்பெண், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.1,399க்கு ஆடைகள் ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார்.
+
Advertisement