நெல்லிக்குப்பம், அக். 16: புதுச்சேரி கிராமப்புற பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இதற்காக பள்ளி விடுதியில் மாணவி தங்கியிருந்த நிலையில், நேற்று அவரது பெட்டியை காப்பாளர் சோதனையிட்டபோது செல்போன் மறைத்து வைத்திருந்தது தெரியவரவே, பெற்றோருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவியின் தாய் சம்பவத்தை விசாரிக்க விடுதிக்கு வரவே, பள்ளியின் 2வது தளத்தில் நின்றிருந்த மாணவி தாய் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சிக்கவே அவரது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவியின் தாய் உதவியுடன் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement