Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 2.10 லட்சம் குடும்பங்கள் திமுகவில் இணைந்தனர்

கடலூர், செப். 15: கடலூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடலூரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஜூலை 1ம் தேதி தமிழக முதல்வர் இப்பணியை தொடங்கி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 649 குடும்பத்தினர் இணைந்துள்ளனர்.

மொத்தம் உள்ள 12,40,412 வாக்காளர்களில் 6,41,707 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். 2ம் கட்டமாக இன்று (15ம் தேதி) அண்ணா பிறந்தநாளில் வாக்குச்சாவடி அளவிலான ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி கூட்டங்கள் நடைபெற உள்ளது. 1,284 வாக்குச்சாவடியில் நடைபெறும் கூட்டங்களில் ஓரணியில் தமிழ்நாடு மூலம் திமுகவில் இணைந்தவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

கரூரில் 17ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்கிறோம். கடலூர் தொகுதியில் 227 பூத்துகள் உள்ளது. 2 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள். இதில், 1,22,802 ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தின் மூலம் திமுகவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது 50 சதவீதம். குறிஞ்சிப்பாடியில் 259 பூத்துகளில் 49 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 43 ஆயிரம் உறுப்பினர்களை இணைத்துள்ளோம்.

புவனகிரியில் 284 பூத்துகளில் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் 260 பூத்துகளில் 1 லட்சத்து 24 பேர் என 50 சதவீதம் வாக்காளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவிலில் 255 பூத்துகளில் 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் என 53 சதவீதம் வாக்காளர்கள் இணைந்துள்ளனர். கிழக்கு மாவட்டத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் என 52 சதவீதம் வாக்காளர்கள் இணைந்துள்ளனர்.

இது இன்னும் அதிகரிக்கும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்கூடாக பார்க்கிறீர்கள். திமுகவினர் ஒவ்வொருவரும் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் பல்வேறு முன்னோடி திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். என்றார் ஐயப்பன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திமுக செயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ இள புகழேந்தி, தொகுதி பொறுப்பாளர் சுவை சுரேஷ், மாநில செயற்குழு விக்ரமன்,

பொதுக்குழு பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், தனஜெயன், விஜயசுந்தரம், காசிராஜன், பகுதி செயலாளர்கள் நடராஜன், சலீம், மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பால கலைக்கோவன், பொறியாளர் அணி குமாரமங்கலம் தென்றல் வேந்தன், மண்டல குழு தலைவர் பிரசன்னா, இளையராஜா, நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி,, கார் வெங்கடேசன், மணிகண்டன், ரங்கநாதன், இளந்திரையன், விஜயகுமார், சவுந்தர்ராஜன், மாணவரணி பாலாஜி, பிஎஸ்என்எல் கோவிந்தன், தகவல் தொழில்நுட்பம் கார்த்தி, பிரவீன், சரத் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.