வானூர் செப். 14: வானூர் தாலுகா ஆரோவில்லில் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகரிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் மரக்கன்று நட்டனர். இளம் சுற்றுச்சூழல் வீரர்களுடன் கை கோர்த்து ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவியுடன் சேர்ந்து, ஆரோவிலின் நியூ ஏரா பள்ளியின் 30 மாணவர்கள் சுமார் 30 உள்நாட்டு இந்திய இன மரங்களை நட்டனர். இதன் மூலம் மேலும் ஒரு பசுமை நடைபாதை உருவாகும், என்றனர். மேலும் புதிதாக அமைந்துள்ள கிரவுன் சாலையில் இரு புறங்களிலும் அழகுபடுத்தும் பணிகளையும் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஆரோவில் சிறப்பு செயல் அதிகாரி சீதாராமன் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி பாஸ்கரன் உள்பட ஆரோவில் அறக்கட்டளையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
+
Advertisement