புதுச்சேரி, ஆக. 14: புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு வங்கி அனுப்புவதுபோல் அறிமுகம் இல்லாத நபர் ஒரு லிங்க் அனுப்பியுள்ளார். அதை கிளிக் செய்து வங்கி விவரங்களை உள்ளீடு செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.75 ஆயிரம் திடீரென மாயமானது. அதேபோல், வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த ஆண் நபரின் 2 வங்கிக் கணக்குகளில் இருந்து யுபிஐ பணப்பரிமாற்றம் மூலம் அவருக்கே தெரியாமல் ரூ.87 ஆயிரத்தை மர்ம நபர் எடுத்துள்ளார். அதேபோல், பாகூரை சேர்ந்த ஆண் நபருக்கு வங்கி அதிகாரி போல் மர்ம நபர் போன் மூலம் பேசியுள்ளார். ஏடிஎம் கார்டு விவரங்கள், ஓடிபி எண்ணை அவரிடம் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்ைத மோசடி செய்துள்ளனர். மேற்கண்ட 3 சம்பவங்கள் குறித்தும் புகார்களின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement