செஞ்சி, ஆக. 14: செஞ்சி அடுத்த மேல்சேவூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (48). இவர் கடந்த வாரம் வீட்டு படுக்கை அறையில் உள்ள செல்பில் செயின், கம்மல், ஜிமிக்கி, மோதிரம், கோல்டு காயின் உட்பட ஐந்தரை பவுன் தங்க நகைகளை துணிப்பையில் போட்டு சுருட்டி வைத்திருந்தாராம். இந்த பையை காணவில்லை என்றும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண் மீது சந்தேகம் இருப்பதாக பச்சையம்மாள் நேற்று செஞ்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நடராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement