பண்ருட்டி, செப். 13: பண்ருட்டி அடுத்துள்ள சாத்திப்பட்டு நெல்லித்தோப்பை சேர்ந்தவர் சண்முகம் (53). முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர் சம்பவத்தன்று வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் இருந்த அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் (35) குடிபோதையில் சண்முகத்தை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சண்முகம் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார்.
+
Advertisement