உளுந்தூர்பேட்டை, செப். 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பூவனூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சீதாராமன் (49), இவர் மீது உள்ள பழைய வழக்கு தொடர்பாக உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பின்னர் அரசு பேருந்தில் ஊருக்கு சென்றுள்ளார். பூவனூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனகோடி மகன் சரத் (36) என்பவர் முன்விரோதம் காரணமாக சோடா பாட்டிலால் சீதாராமனை அசிங்கமாக திட்டி சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்தவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் சீத்தாராமன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்து சரத்தை தேடி வருகிறார்.
+
Advertisement