சங்கராபுரம், செப்.12: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு மூங்கில்துறைப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜாவித் (24) என்பவருடன் கடந்த 4ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்த சிறுமிக்கு திருமண வயது ஆகவில்லை எனவும், இது சட்டப்படி குற்றம் எனக் கூறி கள்ளக்குறிச்சி குழந்தைகள் நல அலுவலர் கவிதா, வடபொன்பரப்பி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வைத்திலிங்கம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் நேற்று திருமணத்தை அதிகாரிகளிடம் கூறி நிறுத்தியது நீங்கள்தான் எனக்கு கூறி மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த ரஹீமா பீ (30), லியாகத் அலி (35), பர்கத் (20), சமீம் (40) ஆகிய 4 பேரும் சிறுமியின் தந்தையான அலிமுல்லாவை (31) அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
+
Advertisement