காட்டுமன்னார்கோவில், ஆக. 12: காட்டுமன்னார்கோவில் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் சாதாரண உடையில் சென்று பள்ளி வளாகத்தில் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து சோதனை செய்தபோது, சட்டை பையில் 200 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், பஜனைமடத்தெருவை சேர்ந்த ஆகாஷ் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement