கடலூர், நவ. 11: கடலூர் மஞ்சக்குப்பம் இளம்வழுதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மலர்விழி (30). இதே ஊரைச் சேர்ந்தவர் அன்பு என்கின்ற ராதாகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீட்டுமனை உள்ளது. இருவருக்கும் வீட்டுமனை அளப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்பொழுது, மலர்விழி அவரது இடத்தில் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மலர்விழி வீட்டிற்கு சென்ற அன்பு, அவரிடம் பிரச்னை செய்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மலர்விழி அளித்த புகாரின்பேரில், கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

