திருக்கோவிலூர், அக்.11: திருக்கோவிலூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வடியங்குப்பம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டதில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ் (22) என்பவர் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருக்கும்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். திருக்கோவிலூர் போலீசார் பிரகாஷை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை செய்ததில் விற்பனைக்காக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருக்கோவிலூர் போலீசார் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement