விருத்தாசலம், அக். 10: கம்மாபுரம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு விக்னேஸ்வரன்(25), நித்தீஸ்வரன் என்ற இரண்டு மகன்கள். வீரப்பன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது வெளிநாட்டில் இருந்து வருவதற்கு தயாராக இருந்தார். இதனால் அவர் வரும்போது விக்னேஸ்வரனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக முடிவு செய்யப்பட்டு பெண் தேடி வந்துள்ளனர். இதன் காரணமாக விக்னேஸ்வரன் கடந்த சில தினங்களாக மனக்குழப்பத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் விக்னேஸ்வரன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து சங்கீதா அளித்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement