சிதம்பரம், டிச. 9: சிதம்பரம் மாலை கட்டி தெருவை சேர்ந்தவர் அய்யூப் கான். இவருடைய மகன் அக்கீம் (33). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கடந்த 7ம் தேதி இரவு, சிதம்பரத்தில் இருந்து சிவாயம் தரிசு பாலம் வழியில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அக்கீம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அக்கீம் இறந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


