கடலூர். அக். 9: கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க டிஎஸ்பி ரூபன் குமார் மற்றும் போலீசார் நேற்று கடலூர் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி கொரியர் பார்சலுடன் 2 பேர் நின்றிருந்தனர். இதனை கண்ட போலீசார் அவர்களை பிடித்த விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், கடலூர் முதுநகரைச் சேர்ந்த தாஸ் மகன் அரவிந்த் (19), ராமு மகன் ராகுல் (22) என்பது தெரியவந்தது மேலும் இவர்கள் புனேவில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வரவழைத்து போதைக்கு பயன்படுத்தியதும் இவர்கள் புனேவில் ரூ.15 ஆயிரத்திற்கு போதை மாத்திரைகளை வாங்கி ரூ.1 லட்சம் வரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அதிகளவு புனேவிலிருந்து வாங்கி கும்பல் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு வலி நிவாரணி மாத்திரைக்கு பதில் 4 அல்லது 5 மாத்திரைகளை உட்கொள்வதால் அது போதை மாத்திரைகளாக பயன்படுத்துகின்றனர், என்