பண்ருட்டி, அக். 9: பண்ருட்டியை அடுத்துள்ள திருவாமூர் பகுதியில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து புதுப்பேட்டை போலீசார் திருவாமூர் பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது திருவாமூர் வள்ளுவர் தெருவில் பட்டாசு திரி தயாரித்து கொண்டிருந்த வெற்றிவேல் (58), பட்டாசு தொழில் செய்ய அனுமதி பெறாமல் பட்டாசு தயார் செய்து திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.