திண்டிவனம், ஆக. 8: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மனைவி கண்ணகி(75) இவர் நேற்று முன்தினம் இரவு தனது கூரை வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 2 மணி அளவில் மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த அய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் பத்மநாபன்(29) என்பவர் மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் மூதாட்டி கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பத்மநாபனை பிடித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் பத்மநாபன் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement