வடலூர், நவ. 7: வடலூர் பார்வதிபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(62). இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அவரது வீட்டின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 200 குடும்பங்கள் செல்வதற்கான வழிபாதையை செம்மண் அடித்து சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவபெருமான், இவரது மனைவி மோகனா, மகன் அருண், வீரவேல் மகன் லட்சுமணன் ஆகியோர் இந்த இடம் எங்களுக்கு சொந்தமான நிலமென்று கூறி செல்வராஜை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து செல்வராஜ், குறிஞ்சிப்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் படி செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவபெருமான், மோகனா, அருண், வீரவேல் ஆகிய 4 பேர் மீதும் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

