கடலூர், டிச. 6:கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என 500க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். இதில் சிறை அலுவலராக விக்னேஷ் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய சிறையில் 10வது பிளாக்கில் மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் ரைஸ் மில் தெருவை சேர்ந்த சந்தோஷ் (25) என்பவர், அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் கிருபாகரனை பணி செய்யவிடாமல் திட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

