புதுச்சேரி, நவ. 6: புதுச்சேரி உருளையன்பேட்டை உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் ஒரு ஆண் குடிபோதையில் தகாத வார்த்தைகளை பேசி பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்துள்ளார். போலீசாரை பார்த்ததும் அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரித்ததில், பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (39) என தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.
+
Advertisement
