திண்டிவனம், நவ. 6: தாம்பரத்திலிருந்து தினந்தோறும் பயணிகள் ரயில் காலை 9.40 மணியளவில் செங்கல்பட்டு, திண்டிவனம், மயிலம், பேரணி வழியாக சென்று 1.30 மணியளவில் விழுப்புரம் சென்றடையும். மீண்டும் விழுப்புரத்திலிருந்து அந்த ரயில் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 8.20 மணிக்கு சென்றடைவது வழக்கம். இந்த நிலையில் திண்டிவனம் பகுதிகளில் ரயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணியாள் நேற்று இந்த ரயில் ரத்துசெய்யப்பட்டது. இன்று பணி நடந்தால் மீண்டும் ரயில் ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
+
Advertisement
