புவனகிரி, நவ. 5: புதுச்சத்திரத்தை அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவர் கடந்த மாதம் 27ம் தேதி புதுச்சத்திரம் கடைவீதி பகுதியில் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆனந்தவேல் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பைக்கை திருடியதாக குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கன்னிதமிழ்நாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(40) என்பவரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
