புதுச்சேரி, ஆக. 5: திருக்கனூர் கூனிச்சப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி இரவு மணலிப்பட்டு ரோட்டில் உள்ள கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். கூனிச்சம்பட்டு சந்திப்பு அருகே மணலிப்பட்டு ரோட்டில் நடந்து சென்றபோது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, முருகசேன் மீது பயங்கர மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகசேனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் முருகசேனை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து முருகேசன் மகன் பன்னீர் வில்லியனூர் போக்குவரத்து (மேற்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்குவரத்து போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குபதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
+