பண்ருட்டி, டிச. 4: பண்ருட்டியை அடுத்துள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சுதா(31). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுதா அவரது தாயார் இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு 1 மணி அளவில் கீழ்மாம்பட்டு வீட்டில் இருந்தவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

