நெல்லிக்குப்பம், அக். 4: நெல்லிக்குப்பம் அடுத்த பெரிய நரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ஜெயப்பிரியா(32). அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் கோவிந்தன் (45). இரண்டு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக அடிக்கடி தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சம்பவத்தன்று காலை ஜெயப்பிரியா, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற கோவிந்தன், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, துணியை பிடித்து இழுத்து கிழித்து நெட்டி தள்ளியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இது குறித்து ஜெயப்பிரியா நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement