திட்டக்குடி, அக். 4:திட்டக்குடியை அடுத்துள்ள பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் சிவா(24). இவர் நேற்று திட்டக்குடி மாநில நெடுஞ்சாலை தர்மக்குடிகாடு அருகே சென்றபோது. அதே திசையில் கோழியூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கிஷோர் (20) என்பவர் பைக்கில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டும், பைக்கும் மோதிக்கொண்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சென்று 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் சேர்த்தனர். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement