புதுச்சேரி, டிச. 2: புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பெரியக்கடை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையில் 10 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது கண்டுப்பிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் பணம், 10 செல்போன்கள் மற்றும் சீட்டுகட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமார் (42), வைத்தியநாதன் (47), சந்துரு (32), ரஞ்சித் (28), முரளி (33), சேவியர் (34), நிர்மல்குமார் (29), ஆனந்த் (39), முதலியார்பேட்டை குமரவேல் (20), வம்பாகீரப்பாளையம் முரளி (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
+
Advertisement

