திருவெண்ணெய்நல்லூர், அக். 29: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கீழண்ட தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (32). இவர் போட்டோகிராபர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இரண்டு பக்கமும் வாசல் கொண்ட வீட்டில் அசோக்குமார் குழந்தைகளுடன் மாடியில் உறங்கியுள்ளார். அவரது மனைவி சங்கீதா இரு பக்கமும் தாழிட்டுவிட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வாசற்காலில் உள்ள வெண்டிலேட்டரில் சூரிய பலகை பொருத்தாமல் இருந்ததால் அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மர பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் ரூ.8,500 பணத்தை திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் இருக்குமென தெரிகிறது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
+
Advertisement


