மங்கலம்பேட்டை, ஆக. 27: கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கடந்த 10ம் தேதி அன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மயக்க நிலையில் இருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
+
Advertisement