கோவில், டிச. 9: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள ஓமாம்புலியூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் சாக்கு மூட்டையில் மணல் திருடியது தெரியவந்தது. இதனை கண்ட போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஓமாம்புலியூர் மெயின்ரோடு தெருவை சேர்ந்த சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது. அதனையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 மணல் மூட்டைகள், மணல் திருட்டிற்க்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


