திண்டிவனம், ஆக.2: திண்டிவனம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து ெசன்னை காவலர் பலியானார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே திண்டிவனம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்னை விழுப்புரம் மார்க்கமாக ரயில்வே இருப்பு பாதை செல்கின்றது. இப்பகுதியில் நேற்று முன்தினம் (45) வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயில்வே பாலத்தின் அருகே மழை நீர் செல்லும் பகுதியில் விழுந்து இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை நடத்தியதில் அவர் தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இரண்டாம் நிலை தலைமை காவலராக பணிபுரிந்து வந்த அரியலூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் காத்தவராயன்(44) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த ஜூலை 31ம் தேதி மதியம் அலுவலக பணி முடிந்து தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய அவர் மாலை 4 மணியளவில் திண்டிவனம் ரயில் நிலையத்தை கடந்தபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
+
Advertisement