சிதம்பரம், ஜூலை 26: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கோட்டைமேட்டு தெரு எழிலரசன் மகன் அஜய்(25) ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சூரிய பிரகாஷ்(21), செந்தில்குமார் மகன் அரவிந்தன் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புவனகிரியை சேர்ந்த இளமாறன் மகன் சக்தி (21) என்பவர் மாணவியை ஆசைவார்த்தை கூறி காதல் வலையில் வீழ்த்தியுள்ளாா.
அதனை தொடர்ந்து கடந்த 9ம் தேதி மாணவியை சக்தி கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் சித்தி சென்னை வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை அடுத்து சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்த அஜய், சூர்ய பிரகாஷ், சக்தி ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர். தலை மறைவான அரவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.