ரெட்டிச்சாவடி, டிச. 1: கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்தூரில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் கோயிலில் அதே பகுதியை சேர்ந்த தரணிதரன் (27) என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூசாரி கோயிலை பூட்விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கோயிலை திறந்தார். அப்போது கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து தரணிதரன் கொடுத்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

