தக்கலை, ஜூலை 10: மூலச்சல் அரசு பள்ளியில் கழிப்பிடம் கட்டுமான பணி தொடங்கியது. விலவூர் முதல் நிலை பேரூராட்சிக்குட்பட்ட மூலச்சல் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை மான்யம் 2025-2026 திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பிடம் கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் பில்கான் தொடங்கி வைத்தார். துணை தலைவர் ஞான ஜெபின், 8வது வார்டு உறுப்பினர் ஜூட்ஸ் பெர்லின், மருத்துவர் ராஜேந்திரன், அரசு தொடக்கப் பள்ளி பொறுப்பு ஆசிரியர் ஹெலன் மேரி ஹெல்லர், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெர்லி ஷீயா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரான்சிஸ், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement