அரூர், ஜூலை 2: அரூர் அருகே கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ.,க்களாக பணிபுரிந்த பிரகாசம், கமலநாதன், ஆனந்தன் ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா, கோபிநாதம்பட்டியில் நடந்தது. இதில், அரூர் போலீஸ் டி.எஸ்.பி., ராமமூர்த்தி (பொ), இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர், கமலநாதன், ஆனந்தன், பிரகாசம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். விழாவில், போலீசாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement