கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பைரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி, கெலமங்கலத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி காலை, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர், கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(24) என்பவர் தங்களது மகளை காதலித்து வந்ததாகவும், அவர் ஆசை வார்த்தை கூறி, தங்களது மகளை கடத்திச்சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement