கோவை, செப். 30: கோவையை சேர்ந்தவர் 13 வயது சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமி வீட்டில் இருந்தபோது சிறுமிக்கு அறிமுகமான விளாங்குறிச்சி தனலட்சுமி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுப்ரமணியன் (39) என்பவர் வீட்டிற்கு வந்தார். சிறுமி தனியாக இருப்பதை அறிந்த சுப்ரமணியன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்த சம்பவம் தொடர்பாக கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.
+
Advertisement