கோவை, செப். 30: ஊராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு உழைப்போர் உரிமை இயக்கம் (எல்டியூசி, ஏஐசிசிடியு) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு எல்டியூசி மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்க வேண்டும், 480 நாட்கள் பணி புரிந்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த முறை, தனியார் மயம், தொகுப்பூதிய முறை ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
+
Advertisement