Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ - ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படம்: கோவையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர்

கோவை, டிச. 13: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் முன்னிட்டும், ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாகவும் நேற்று படையப்பா திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். 1999ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படையப்பா படத்தை 25 ஆண்டுகள் கழித்து நேற்று ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, லட்சுமி, மணிவண்ணன், நாசர், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். வைரமுத்து பாடல்கள் எழுதினார்.இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘படையப்பா’ திரைப்படத்தின் புதிய டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டது. அப்போது ஒரே ஒரு வீடியோவின் மூலம் படையப்பா ரீ- ரிலீஸை பட்டிதொட்டி எங்கும் புரோமோஷன் செய்துவிட்டார் ரஜினிகாந்த்.

படையப்பா படம் உருவான விதம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் படையப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் ரஜினி பேசியிருப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.இந்த நிலையில் படையப்பா ரீ- ரிலீஸ் காரணமாக நேற்று திரையரங்குகளில் வெளியாக இருந்த கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியாகவில்லை. அதேபோல பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ திரைப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை. இதனால் ‘படையப்பா’ படத்துக்கான காட்சிகள் எண்ணிக்கையும், வசூலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என இதுவரை வெளியான நடிகர்களின் படங்களில் விஜய்யன் கில்லி ரூ. 25 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் கில்லி பட வசூலையும் ஓரங்கட்டும் வகையில் ரஜினியின் படையப்பா பட ரீ-ரிலீஸ் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படையப்பா படம் பிரீ புக்கிங்கில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.கோவையிலும் ரஜினி ரசிகர்கள் படையப்பா படத்தின் ரீ- ரிலீசால் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கோவையிலும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை காண்பதற்கு சிறியவர்கள், இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வருகை புரிந்தனர். ரஜினி ரசிகர் மன்றத்தினர் கேக் வெட்டி திரைப்படத்தை காண வந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். மேலும் திரையரங்கு முன்பு அமைக்கப்பட்டர்களுக்கு ரஜினியின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.